சுகமளித்தலும் வியாதி என்றால் என்ன என்பதும் Cleveland, Ohio, USA 50-0808 1(இந்தச் செய்தியின் ஒலிநாடாவானது மிகவும் தெளிவற்றதாகவும், அதிக இரைச்சல் நிறைந்ததாகவும் இருக்கிறது. கடைசி சில மேற்கோள்கள் தான் தெளிவாக இருக்கின்றன. ஆனால் இன்னுமாக சற்று இரைச்சலுள்ளதாகவே இருக்கிறது - ஆசிரியர்.) ...?... சகோதரன் பாக்ஸ்டர், உமக்கு நன்றி. கேட்டுக் கொண்டிருக்கும் கூட்டத்தினரே, மாலை வணக்கம்....... பேசும்படிக்கு இந்தப் பிற்பகலில் மறுபடியும் இங்கே இருப்பது என்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கிறோம்....... நேரத்தோடு ஒவ்வொரு நபருக்காவும் ஜெபித்து....... ஜீவியத்திலிருக்கும் பாரத்தை சற்று இலகுவாக்குகிறோம், அதை இங்கு இன்னும் சற்று அதிக மகிழ்வளிக்கிறதாக ஆக்குவதன் மூலமாக, நாம் அவ்வாறு செய்கிறோம்... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) நான் வேதாகமத்திலிருந்து கொஞ்சம் வாசிக்க விரும்புகிறேன்.... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) முதலாவது ஆராதனையை சகோதரன் பாக்ஸ்டர் சற்று முன்பு தான் வாசித்திருக்கிறார். (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) யோசுவாவிலிருந்து வாசிக்கலாம்...... 6வது வசனம். பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய். ...மாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) கர்த்தர் தாமே...?... வார்த்தையோடு கூட்டுவாராக. ஜெபிப்போம்........ 2எங்கள் பரலோகப் பிதாவே, நாங்கள் ஒன்றாகக் கூடி வந்திருக்கும்படி கிடைத்த சிலாக்கியத்திற்காக நாங்கள் இன்றிரவு உமக்கு நன்றி கூறுகிறோம். எங்களுக்கு இன்னும் பேச்சு சுதந்திரம் இருந்து, எங்கள் மனசாட்சி கூறுவதன்படியே தேவனை ஆராதிக்கும் உரிமை எங்களுக்கு இருப்பதற்காக, எங்கள் தேசத்திற்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம்...?... சுதந்திரத்தின் பரிசுத்த வெளிச்சத்தோடு கூட எங்கள் தேசம் நெடுங்காலமாக ஆசீர்வதிக்கப்படுவதாக...?.... பிதாவே, இன்றிரவு நாங்கள் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும்படியாக ஒன்றாகக் கூடி வந்திருக்கையில், நீர் எங்களைச் சந்தித்து, உமது வார்த்தையில் ஜனங்களுக்கு விசுவாசத்தைக் கொடுக்கத்தக்கதாக அவர்களைத் தைரியப்படுத்தும்படியாக எங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். ஜனங்கள் மேல் வைக்கப்பட்டிருக்கிற துன்பங்களிலிருந்து எங்களை விடுதலையாக்கும்படிக்கு உமது ஆவியானவர் இப்போது இங்கே பிரசன்னமாயிருக்கிறார். பிதாவே, எல்லாவிடங்களிலுமுள்ள ஊழியக்காரர்களையும் எல்லாரையும் ஆசீர்வதித்தருளும், குறிப்பாக, இன்றிரவு தேவையுள்ளவர்களாயிருக்கிற இந்த ஜனங்கள் எல்லாரையும் ஆசீர்வதியும். எங்களோடு அவிசுவாசிகள் யாராவது இருப்பார்களானால், உமது குமாரனாகிய இயேசுவினிடத்தில் அவர்களும் கூட விசுவாசிகளாக ஆவார்களாக. 3நாங்கள் ஒருசமயம் அந்நியர்களாகவும், இரக்கமில்லாதவர்களாக தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டிருந்தோம் என்பதை நினைத்துப் பார்க்கிறோம். எங்களுடைய ஸ்தானத்தில், குற்றமுள்ளவர்களுக்காக குற்றமற்றவராக கிறிஸ்து மரித்தார். மேலும் இப்பொழுது, நாங்கள் தேவனுடைய குமாரர்களும் குமாரத்திகளுமாயிருக்கிறோம். நாங்கள் எவ்வாறு இருப்போம் என்று இன்னும் வெளிப்படவில்லை, ஆனால் அவருடைய சொந்த மகிமையான சரீரத்தைப் போன்ற ஒரு சரீரத்தை நாங்கள் உடையவர்களாக இருப்போம் என்பதை அறிந்திருக்கிறோம், அவர் இருக்கிறவண்ணமாகவே நாங்கள் அவரைக் காண்போம், அப்போது வியாதியிலிருந்தும், வேதனையிலிருந்தும் விடுதலையாயிருப்போம். தேவனே, அந்த மகிமையான மீட்பின் நாள் வருகிறது; இயற்கை எல்லாமே அந்த நாளுக்காக தாங்கொண்ணா துயரத்தோடு புலம்பிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது, எல்லா தீர்க்கதரிசிகளாலும் உரைக்கப்பட்டிருக்கிற அந்த மகத்தான பொற்காலம் உடைத்து வெளிவரும்படியான வாசற்கதவின் அதே நிலையில் தான் நாங்கள் இருக்கிறோம். எங்கள் மத்தியிலுள்ள யேகோவா தேவனின் பிரசன்னத்தைக் குறித்த அறிவுக்கு ஜனங்களைத் திருப்பும்படியாக, தேசம் முழுவதும் உள்ள உமது ஊழியக்காரர்களால் அடையாளங்களும் அற்புதங்களும் செய்யப்பட்டு வருகின்றன. இன்றிரவு எங்களை ஆசீர்வதியும். அவதிப்படுகிற யாவரையும் ஆசீர்வதித்தருளும். கர்த்தாவே, வியாதிஸ்தருக்காக ஜெபிக்கும்படி உமது ஊழியனையும், உம்மை விசுவாசிக்கும்படி வியாதியஸ்தர்களையும் அபிஷேம் பண்ணியருளும். நாங்கள் உமது நேச பிள்ளையாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென். 4நான் உங்களுடைய நேரத்தில் இன்னும் ஒருசில நிமிடநேரங்களை எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். சற்று கழிந்து, ஆராதனைகளில்.... இதை முதலாவதாக, மிக நீண்ட நேரம், செய்ய முயற்சிக்கும் காரணம் என்னவென்றால்...?... எப்பொழுதாவது இதை அறிந்திருக்கிற யாருமே கிடையாது என்று நான் நினைக்கிறேன், ... இந்த பக்கத்தில். நாம் மகிமைக்குப் போய் சேர்ந்த பிறகு, என்னவொரு ஜீவியம், அது உங்களிடமிருந்து எதை எடுத்துப்போடுகிறது, நீங்கள்...... இயற்கைக்கு மேம்பட்டவைகளோடு மல்யுத்தம் செய்வது...?... ஜீவனே என்னைவிட்டுப் போய்விடுகிறது....?... சிலசமயங்களில் கூட்டத்தில், எங்காவது எட்டு, பத்து, பதினைந்து பவுண்டுகள் இழந்துவிடுகிறேன். அது ஒரு ஆராதனையில். நான் அவ்வாறு தான் அதைக் கண்டுபிடிக்க நேரிடுகிறது, அந்த ஆவியானது எங்கேயிருக்கிறது என்பது...... அது.... அது இருபுறங்களிலுமுள்ள ஒரு சக்தியைப் போன்ற ஏதோவொன்றாக இருக்கிறது. 5நமக்கு அறிமுகமாவதைக் காணும்போது, அப்போதே நாம் கூட்டத்தின் கடைசியை நோக்கி வந்துவிடுகிறோம், நான் அப்படியே என்னுடைய முழு ஆத்துமாவையும் அதற்குள் போட்டுவிடுகிறேன். நம்மால் கூடுமான ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்கும்படியாகவே முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். இந்த ஆராதனைகள் தொடர்ந்து போய்க் கொண்டிருக்கையில்....... அநேகர் ஜெபிக்கப்படும்படியாக மேலே வர விரும்புகிறார்கள். உங்களைச் சுகப்படுத்துவது தேவனிடத்திலுள்ள உங்கள் விசுவாசம் தான். நீங்கள் கட்டாயம் விசுவாசத்தைக் கொண்டிருக்கத்தான் வேண்டும். ஒரே காரியத்தில், அது விசுவாசத்தை அணுகுவதற்கான வழியாகவும், தேவனை அணுகுவதற்கான வழியாகவும் இருக்கிறது. அங்கே எப்போதுமே ஒரு அணுகுமுறை இருக்கிறது, ... ஒரு அருளப்பட்ட அணுகுமுறை. தேவன் வைத்திருக்கிறார், எல்லாவற்றிலும் இரண்டு வழிகள் உண்டு, அது சரியான வழி மற்றும் தவறான வழி. உங்களுடைய வழியும் என்னுடைய வழியும் தவறான வழியாக இருக்கிறது. அது நமக்கு எவ்வளவு சரியானது அல்ல என்று நமக்குத் தோன்றினாலும் அது ஒரு பொருட்டேயல்ல, இன்னுமாக தேவனுடைய வழிகள் உண்மையாகவும் சரியாகவும் இருக்கின்றன. அவைகள் காலம் கடந்து தான் புரிந்துகொள்ளப்படுகின்றன. ஆனால் தேவன் விளங்காத இரகசியமான வழிகளில் கிரியை செய்கிறார், நடப்பிக்கப்படும்படியான அவருடைய அற்புதங்கள். 6இப்பொழுது, நீங்கள் விசுவாசத்தின் மூலமாக மாத்திரமே வர முடியும், விசுவாசத்தின் மூலமாகவே, என்னுடைய விசுவாசத்தில் அல்ல, ஆனால் உங்களுடைய விசுவாசத்தில் தான், தனிப்பட்ட நபருடைய விசுவாசம். நான் இரட்சிக்கப்படும்படியாக, தேவனிடத்தில் விசுவாசம் கொண்டிருக்கலாம். இரட்சிக்கப்படும்படியான விசுவாசத்தைக் கொண்டிராத அநேகர் இருந்திருக்கிறார்கள். நமக்கு விசுவாசம் இருக்கும் மட்டுமாக, நம்மால் இரட்சிக்கப்பட முடியாது. சுகமளித்தலில் எனக்கு விசுவாசம் உண்டு. ஒருக்கால் உங்களுக்கு சுகமளித்தலில் விசுவாசம் இல்லாமல் இருக்கலாம். நல்லது, அப்படியானால் அது உங்களுக்கானது அல்ல. சமீபத்தில் யாரோ ஒருவர் என்னிடம் கேட்டார், அவர், “சகோதரன் பிரன்ஹாமே...” என்றார் அவர் தெய்வீக சுகமளித்தலில் விசுவாசம் கொண்டிராத ஒரு சபையின் ஊழியக்காரராக இருந்தார். நான் எந்த சபைகளையும் குறைகூறவில்லை . அநேக ஜனங்கள் விசுவாசிக்கிறார்கள்....... உங்களுக்கு உரிமை இருப்பது போன்றே எல்லாருக்கும் ஒரு உரிமை உண்டு. நமக்குத் தேவையான எதற்காகவும் வெறுமனே விசுவாசியுங்கள்... எனவே அவர் கற்பித்தார்...?... நீங்கள் தெய்வீக சுகமளித்தலை விசுவாசிக்காவிட்டால், அப்படியானால்..... நான் அதைக் கொண்டிருக்க வேண்டியிருந்தால்... நான் அதில் விசுவாசம் கொண்டிருந்திராவிட்டால், நான் இங்கே இருந்திருக்கவே மாட்டேன். நான் வேறு எதையாவது செய்து கொண்டிருந்திருப்பேன். 7ஆனால் அந்த ஊழியக்காரர் என்னிடம் சொன்னார், அவர், “சகோதரன் பிரன்ஹாமே, நீங்கள்... தேவன் உம்மைச் சந்தித்து, வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும்படியாக அவர் அதை உமக்குக் கொடுத்திருப்பாரானால், நீர் இங்கே வெளியிலுள்ள அந்த மருத்துவமனைக்குப் போய், 'சகல நோயாளிகளே, எழுந்து, என்னை பின்தொடர்ந்து வெளியே வாருங்கள்' என்று சொல்ல முடிந்திருக்குமே. நீர் உண்மையாகவே தேவனால் அனுப்பப்பட்ட மனிதனாக இருந்தால், அவ்வாறு சொல்லியிருக்க முடிந்திருக்குமே, அப்போது அவர்கள் எல்லாரும் அங்கே வெளியே உம்மைப் பின்தொடர வேண்டியிருந்திருக்குமே” என்று கூறினார். சொன்னார்...... அதற்கு நான், “நல்லது, சகோதரனே, கிறிஸ்துவின் இரட்சிக்கும் கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ண தேவனால் நீர் அழைக்கப்பட்டிருக்கிறீர் தானே?” என்று கேட்டேன். அவரும், நான் அழைக்கப்பட்டேன்“ என்று கூறினார். அப்போது நான், “இப்பொழுது, நீர் இங்கே கீழேயிருக்கும் மதுக்கடைக்குப் போய், அந்தக் குடிகார ஜனங்கள் எல்லாரையும் பார்த்து, எல்லாரும் வாருங்கள், என்னை பின்தொடர்ந்து வெளியே வாருங்கள். நீங்கள் எல்லாரும் இரட்சிக்கப்பட்டு விட்டீர்கள்' என்று கூறலாமே” என்று சொன்னேன். அதற்கு அவர், அவர்கள் என்னை விசுவாசித்திருந்தால், என்னால் அது முடிந்திருக்கும் என்றார். நான், அவ்வாறு தான், அவர்கள் என்னை விசுவாசித்திருந்தால், என்னாலும் அது முடிந்திருக்கும்“ என்று கூறினேன். எனவே அங்கேதான் அது இருக்கிறது, நீங்கள் விசுவாசித்தால். அது நாம் விசுவாசிக்கும் விசுவாசத்தின் மூலமாக மாத்திரமே. இப்பொழுது, அடையாளங்களும் அற்புதங்களும் செய்யப்பட்டுள்ளன. உண்மையாகவே, அவைகள் தீர்க்கதரிசன வரங்களும் மற்றவைகளுமாக இருக்கின்றன. அநேக ஜனங்கள் அதை விசுவாசிக்க விரும்பாமல் இருக்கலாம். 8அவர் சொன்னார்.... அந்த மனிதர், “நான் அதை விசுவாசிக்க மாட்டேன்” என்று கூறினார். நான், “அப்படியானால்) அது உமக்கானது அல்ல. அது விசுவாசிகளுக்குரியது, அவர்களுக்குத் தான் அது நியமிக்கப்பட்டுள்ளது, அவிசுவாசிகளுக்கல்ல, ஆனால் விசுவாசிக்கிறவர்களுக்குத் தான்” என்று கூறினேன். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும். அதன்பேரில் தான் தெய்வீக சுகமளித்தலானது அஸ்திபாரப்படுத்தப்பட்டுள்ளது. சிலசமயங்களில், தேவன் விசேஷமான காரியங்கள் சம்பவிக்கும்படி அனுமதிக்கிறார்...?... விசுவாசியின் விசுவாசம்... நாமெல்லாரும் ஒரு அளவோடு தான் விசுவாசிக்கிறோம். ஆனால் ஒருக்கால் சிலர் மற்றவர்களைக் காட்டிலும் இன்னும் கொஞ்சம் அதிக விசுவாசத்தைக் கொண்டிருக்கலாம். ஒருசில இரவுகள், நான் ஆராதனைகளுக்கு முன்னால் செய்யவேண்டிய பாகத்தில் இருக்கையில், நாம் கூட்டம் கூடுவதற்காக காத்துக் கொண்டிருக்கையில், நான் சிறிது பேசும்படியான சிலாக்கியத்தைக் எடுத்துக்கொள்கிறேன், எனவே தெய்வீக வரம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஒருவிதத்தில் ஜனங்களுக்குப் புரியவைக்க வேண்டுமானால். 9இப்பொழுது, ஊழியக்காரர்களும், மற்றவர்களும், அவர்கள் காரியங்களைத் திரும்பத்திரும்ப திரும்பத்திரும்ப தேடுகிறார்கள் ஆயினும், இது ஜனங்களுக்கான என்னுடைய கடமையாக இருப்பதாக உணருகிறேன். மேலும் இப்பொழுது, அவர்களில் சிலர், அது அவர்களை சற்று நேரம் தொடர்ந்து வைத்திருக்க வேண்டியதாக செய்துவிடுகிறது. நான் -நான் அதைச் செய்ய வேண்டியிருப்பதற்காக வருந்துகிறேன். ஏதோவொன்றினூடாக ஓடி, நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறியாமல் இருப்பதைக் காட்டிலும், அப்படியே சற்றுநேரம் அப்படியே இருந்து, இதைக் குறித்து சிந்தித்துப்பார்த்து, கூட்டத்தில் நீண்டநேரம் தரித்திருந்து, உண்மையாகவே சுகத்தைப் பெற்றுக்கொள்வதையே நான் அதிகம் விரும்புவேன். வெளியே சென்று, பிறகு கூட்டங்களையும் மற்றவைகளையும் நீங்கள் குற்றங்கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். அது.... நீங்கள் இங்கே கீழே மேயோ மருத்துவமனையிலோ, அல்லது மனநல மருத்துவரிடமோ, அல்லது அவர்களில் சிலரிடமோ இருந்திருந்தீர்களானால், நீங்கள் அங்கே ஒரு மாதம் தங்கியிருக்கும்படி அவர்கள் உங்களிடம் சொல்லியிருப்பார்களே, நீங்களும்...?.... தங்கியிருப்பீர்களே. ஆனால் அதெல்லாம் சரிதான். ஆனால் அங்கேதான் நாம் ஜனங்களைக் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.... மேலும் யாராவது ஒருவர்… 10தெய்வீக சுகமளித்தலானது ஒவ்வொரு நபரிடமும் போய்சேர்ந்து விட்டது, ஒரு கிறிஸ்தவனாக இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க உரிமை உண்டு. அது சரியே. உங்கள் மத்தியில் வியாதிப்பட்ட யாராகிலும் இருந்தால், மூப்பர்களை அழையுங்கள். அதுதான் உங்கள் சபையிலுள்ள டீக்கன்மார்கள். பாருங்கள்? அதன்பிறகு உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கை செய்து, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள் என்று அவன் கூறினான்... அது எல்லாருமாக இருக்கிறது. எந்த மனிதனையும், எந்த நபரையும் கேட்டுப்பாருங்கள்... ஏதோவொரு தெய்வீக சுகமளிக்கிற ஆராதனை பட்டணத்திற்குள் வரும் மட்டுமாக, நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. அது தேவனுடைய திட்டம் அல்ல. நீங்கள் வியாதிப்பட்டிருந்தால், உங்களுக்கு அந்த ஜெபத்தில் விசுவாசம் இருக்கும் வரையில், உங்களுக்காக ஜெபித்து உதவி செய்யும்படி, ஏதோவொரு நல்ல கிறிஸ்தவரைப் பெற்றிடுங்கள். அது போதுமானது. அவ்வளவு தான். உங்கள் மேய்ப்பரை கூப்பிடுங்கள். அதற்காகத்தான் அவர் இருக்கிறார், வந்து உங்களோடு ஜெபிக்கும்படியாகவே அவர் இருக்கிறார். அவர் ஒரு தெய்வபக்தியுள்ள மனிதராக இருப்பாரானால்..... எல்லா உண்மையான ஊழியக்காரர்களும் தெய்வபக்தியுள்ள மனிதர்கள் தான் என்று நான் நிச்சயமாகவே விசுவாசிக்கிறேன். அது சரியே. அவர்கள் எல்லாருமே மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தெய்வபக்தியுள்ள ஜனங்களாக இருக்கிறார்கள். அது உண்மை . அவர்கள் ஒவ்வொருவருக்குமே... ஒரு பரிபூரண உரிமை உண்டு. 11இப்பொழுது, விசுவாசத்தை தூண்டுகிறதாக, தேவன் சபையில் சேர்த்திருக்கிற காரியங்கள் அங்கே ஒருக்கால் இருக்கலாம். ஆனால் இப்பொழுது, நான் போகும்போது, சுகமளித்தலானது போய்விடவில்லை. சுகமளித்தலானது, நாம் இங்கே இருப்பதற்கு முன்பாக அது இருந்ததைக் காட்டிலும், இன்னும் அதிகமாக இருக்க வேண்டும். பாருங்கள், புரிகிறதா? அதுதான் நோக்கமாக இருக்கிறது, பின்நாட்களின்... ஆவியை தங்களுடைய சிந்தையில் கொண்டிருக்கும் ஜனங்களைப் பெற்றுக்கொள்வதுதான். நாம் பிந்திய நாளில் இருக்கிறோம். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நாம் அவ்வாறு தான் இருக்கிறோம். உலகமானது பின்நாட்களின் ஆவியில் இருக்கிறது. ஆனால் இன்னுமாக சபையோ பின்நாளின் ஆவியில் (latter-day Spirit) இல்லை . புரிகிறதா? வேறு வார்த்தைகளில் கூறினால், நாம் ஒருக்கால் ஒரு பாகத்தில் இருக்கலாம், ஆனால் தேவன் அவர்களை வழிநடத்துகிற எந்தவிடமாக இருந்தாலும், அவர்கள் அப்படியே அதில் பொருந்தும் அளவுக்கு, தம்முடைய சபையானது அவ்விதமான ஆவியில் இருக்கும்படிக்கே தேவன் விரும்புகிறார். பின்நாட்கள் அல்லது உலகம் துண்டு துண்டாகப் பிளக்கப்படுதல்..... என்னே, என்னே. அந்த இடங்களை நோக்கிப்பாருங்கள்: புசித்தலும், குடித்தலும், பெண்கொள்ளலும், பெண்கொடுத்தலும், மற்றும் அங்கே உலகத்தில் இருக்கிற எல்லா ஓழுக்கக்கேடான காரியங்களையும் பாருங்கள். பின்நாளின் ஆவியில் பிசாசு தன்னுடைய சேனைகளை கீழே அனுப்பியிருக்கிறான். ஆனால், இன்னுமாக ஊழியக்காரர்களாகிய நாம் அந்த ஆவியிலுள்ள சபையைப் பெற்றிருக்கவில்லை. அவர் திரும்பிவரும்போது, எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்ல வேண்டுமானால் (caught away), நாம் நிச்சயமாக அந்த நிலையில் இருந்தே ஆக வேண்டும்...... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) 12ஆகையால்தான்... நான் ஒருமுறை அருங்காட்சியகம் ஒன்றில் இருந்தது என் நினைவுக்கு வருகிறது. எனக்கு கலை மற்றும் இயற்கை என்றால் பெரிதும் பிடிக்கும். நான் ஒரு படத்தைப் பார்த்தேன், அந்தப் படத்திற்கு எவ்வளவு விலை இருக்குமோ என்று வியந்து கொண்டிருந்தேன். அதன்மேல் ஒரு மதிப்பு அதற்கு இருந்தது, அது மூலமுதலான படமாக இருந்தது.... இன்று இங்கே பட்டணத்தில் ஒரு படத்தைக் கண்டேன். “வீட்டிற்கு காணக்கூடாத விருந்தினராகிய கிறிஸ்து” என்ற படம். நான் உள்ளே சென்றபோது, அவர்கள் அதற்கு விலைநிர்ணயம் பண்ணியிருந்தார்கள். அது வெறுமனே அந்த மூலமுதலான தலைசிறந்த படைப்பிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படமாக இருந்தது.... அந்த தலைசிறந்த படைப்பானது ஆயிரமாயிரம் டாலர்கள் என்ற விதமான மதிப்பு உடையதாக இருந்தது. அந்த ஓவியன், “ஏன், அந்த மனிதன்...” எனவே நான், “அந்தப் படத்தை வரைய ஒரு மனிதனுக்கு தன்னுடைய ஆயுள்காலத்தை அது எடுத்துக்கொண்டதே” என்றேன். எந்தப் படமும் வரையப்பட முடிவதற்கு முன்பாக, அது தீட்டப்படுவதற்கு முன்பாக, எந்த தலைசிறந்த படைப்பும், அது முதலில் குற்றம் கண்டுபிடிப்பவர்களின் மன்றம் வழியாகப் போயாக வேண்டும், இந்த குற்றம் கண்டுபிடிப்பவர்கள் எல்லாரையும் அது கடந்து போயாக வேண்டியிருக்கிறது. பிறகு அது அந்த விமர்சன் செய்பவர்களைக் கடந்து போகுமானால், அது புகழ்வாய்ந்தவர்களின் சபாமண்டபத்தில் தொங்கும். 13(ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) ...?... எழுப்புதல் தேசத்தின் எல்லாவிடங்களிலும் வீசியடித்துக் கொண்டு போய்க் கொண்டிருக்கின்றன. அதுதான் உலகத்திலுள்ள பெந்தெகோஸ்தே சபையாக இருக்கிறது...?... பத்து இலட்சத்திற்கும் அதிகமான மனமாற்றங்கள்...?... ஞானஸ்நானம்.... கொஞ்சம் நீண்ட காலம்.... அல்ல. (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) ஜனங்கள் அதைப் பார்த்து நகைக்கத் தொடங்குகிறார்கள். (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) [இங்கு இரட்டிப்பாக ஒலிப்பதிவு செய்யப்பட்டிருப்பதால், புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது - ஆசிரியர்.) ....... அதிலிருந்து, நான் ஒருபோதும் வெளியே வரவில்லை. அவர்கள் என்னை வெளியே தள்ளினார்கள்....... எனக்கு ஒரே சிறகுள்ள பறவைகளான, சகோதரர்களும் சகோதரிகளும் இருந்தார்கள். எப்படியும், அவர் சொன்னார், உங்களுக்குத் தெரியும், புறாக்கள் சிதறிப்போய்விட்டன, ஒருவர் மற்றவரோடு எந்த ஐக்கியமும் வைத்துக்கொள்வதில்லை. அந்தப் பழைய தோட்டி எதையும் தின்னும், ஆனால் புறாவோ தன்னுடைய ஆகாரத்தைக் கவனிக்கிறது. பாருங்கள்? 14இப்பொழுது, கூர்ந்து கவனியுங்கள். அந்தச் சிறு சபையானது ஒரு சந்திலே உதைத்து தள்ளப்பட்டு, பரிசுத்த உருளையர்கள் என்றும் மதவெறியர்கள் என்றும் அழைக்கப்பட்டது. ஆனால் அங்கே கீழே வழிவழியாக, தேவன் அதைக் கருத்தூன்றி கூர்ந்து நோக்கும்படியாக ஒரு படத்தை வரைந்து கொண்டிருந்தார். இக்காலைகளில் ஒன்றில், அவர் அதையும் கூட புகழ்வாய்ந்தவர்களின் மன்றத்தில் தொங்கவிடப்போகிறார். அது சரியே. சிரித்து (நகைத்து), கேலி செய்த எல்லாரும், அவள் வெளியே போகும்போது...... அவளைக் காண்பார்கள். [ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) நீங்களும் அவர்களோடு எண்ணப்படுவதற்கு நீங்கள் சந்தோஷமாக இல்லையா? நான் இங்கே இருந்து, தேவனை விசுவாசிக்கிற ஜனங்களைக் கொண்டிருந்து, அவருடைய அற்புதமான கிரியைகளில் விசுவாசம் கொண்டும், மீண்டுமாக அவருடைய இரண்டாம் வருகையில் விசுவாசம் கொண்டவர்களாகவும் இருக்கிற ஜனங்களை உடையவர்களாக இருப்பது எனக்கு சந்தோஷமாய இருக்கிறது. இப்பொழுது, கூடவே உதவியாக இருக்கும் இங்கே கொஞ்சமான ஏதோவொன்றின் பேரில் உங்களிடம் பேசும்படியாக நான் நம்புகிறேன், அது தெய்வீக சுகமளித்தல் சம்பந்தமாகத்தான். நீங்கள் சுகமளித்தலை சரியாக அணுகாவிட்டால், நீங்கள் உங்கள் சுகத்தைப் பெறுவதில் தோல்வியடைந்து விடுவீர்கள். அநேக அநேக நேரங்களில், ஜனங்கள் மிகவுமாக அமைதியாக இருக்க விரும்புகிறார்கள், அவர்கள் இதையோ, அதையோ, அல்லது மற்றதையோ விரும்புகிறார்கள். அவர்கள்...?... போன்ற ஒருவிதத்தினூடாக உடைத்துக்கொண்டு போகிறார்கள்...?... [ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) ........ 15அந்த நபரைக் கேட்டுப்பாருங்கள்... உட்காரும்படி. அமைதியாக இருக்காத அந்த நபர்...?.... நாம் துரிதப்படுவதில்லை . அவர்கள்...?... என்று அவர்களிடம் கேட்டுப்பாருங்கள். இன்று உலகத்தோடுள்ள காரியமும் அதுதான்..... நாம் மிக அதிகமாக அவசரப்படுகிறோம்........ வியாபார புருஷர்களே, தேவனுக்கு முன்பாக உங்களைத்தானே மதிப்பீடு செய்து பாருங்கள். சிலசமயங்களில் கூட்டமானது ஒரு மணிநேரத்திலோ, ஒன்றரை மணிநேரத்திலோ முடியப்போகும்போது, ஓ, என்னே . என்ன மாதிரியான ஒரு கூட்டம். ஆம், ஐயா...?... நீங்கள் எவ்வளவு காலம்..... என்று நினைவுகூருங்கள்...?... இங்கே இருப்பது. இங்கே, நீங்கள் நினைவில் கொள்ளுங்கள், புற்றுநோய்...?... அதற்காக. நம்முடைய சரீரம் சுகமடைய நமக்குப் போதுமான விசுவாசம் இல்லை என்றால், நீங்கள் எவ்வாறு எடுத்துக்கொள்ளப்படுதலில் போகப்போகிறீர்கள்? ஏனென்றால் இந்த சாவுக்குரியது அழியாமையை எடுத்துக்கொள்ள வேண்டும்.... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) அடையாளங்களும் அற்புதங்களும் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன, விசுவாசிக்கும்படியான விசுவாசத்தைப் பெற்றிருக்கிற ஜனங்கள் எல்லாரும்...?... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.] ஆத்துமாக்களின் உபத்திரவம். 16(ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) ...?.... சபைக்கு முன்னடையாளமாக. யாருக்கும் தெரியாது. இவைகள் போன உடனே, உபத்திரவம் நடந்து கொண்டிருந்தது. அது...?... ஒருபோதும்.... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்... ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுதல்...... அதோடு கூட. இப்பொழுது, நீங்கள் தெய்வீக சுகமளித்தலை அணுகுகிறீர்கள்... முதலாவது காரியம், சாத்தான் என்பவன் யார்? -..?... நீங்கள் யாவரும் அதைக் குறித்து.... நீங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துவது அவசியம்....... [ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) நான், “ஓ, என்னே ” என்றேன். நான் ஒரு சிறு வயதுள்ள பிடிவாதமான பையனாக வெளியில் சலவைக்கல்லில் விளையாடிக்கொண்டிருந்து, நான் நடந்துவரும்படியாக அவன் கொண்டிருந்தால், ஏனென்றால் இதோ நான்........ அதற்குள் போய்க் கொண்டிருக்கிறேன். (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.)..?.. நான் எவ்வளவு தூரமாக இருக்கிறேனோ ஏறக்குறைய அவ்வளவு தூரமாக, நீங்கள் பின்னால் இருப்பதாக, அவருடைய மகன்கள் அங்கே உட்கார்ந்து கொண்டிருப்பதாக எனக்கு இருக்கிறது. [ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.... அது நேற்று இருந்தது போன்றே தோன்றுகிறது. நான் நம்புகிறேன்...?... தேவன்.... நான், நல்லது, ஒருக்கால் இந்தப் பையன்கள்...?... மாட்டார்கள். முதலாவது காரியமாக, அவர்கள் போய்விட்டார்கள். (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.). ஆயினும், நாம்..... என்று இருக்கும்போது, நமக்குப் போதிக்கப்பட்டிருக்கிறதே“ என்று நினைத்திருப்பேன். 17(ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.] ...?... அதன்பிறகு நான், 'நாம் இவ்விதமாக மரிக்கும்படி தேவன் செய்திருப்பாரா?“ என்று நினைத்தேன். நாம் என்றென்றுமாக ஜீவிக்கும்படிக்கே தேவன் நம்மை உண்டாக்கியிருக்கிறார். பாவம் மரணத்தைக் கொண்டுவந்தது. எனவே வியாதியானது மரணத்தின் சாரமாக இருக்கிறது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள், ஏனென்றால் பாவமானது.... பாவம் தான் முதலாவது இருக்கிறது. பாவமே வியாதியைக் கொண்டுவந்தது. பாவம் இல்லாமல் இருந்தால், அங்கே அதற்கு மேலும் எந்த வியாதியும் இருக்காது. ஏனென்றால் வியாதியானது.... ஆனால் முதலாவது நீங்கள் அறிய வேண்டுமென்று நான் விரும்புவது, அது பிசாசினுடையதாக இருக்கிறது. இப்பொழுது, நான் சற்றுநேரம் இங்கே பேசப்போவது ஒரு பழமை நாகரீகமான சிந்தனையாக இருக்கிறது. ஆனால் இப்பொழுது, நவீன கருத்துக்களை உடைய நவீன ஜனங்களாகிய உங்களில் சிலர் இதனோடு வேறுபாடு கொள்ளலாம். ஆனால் நவீன கோட்பாட்டின் பேரில் போதிப்பதில் என்னுடைய சிந்தனைகளை நான் எடுத்துக்கொள்ளவில்லை; நான் தேவனுடைய வார்த்தையின் பேரிலேயே இதைப் போதித்துக் கொண்டிருக்கிறேன். வார்த்தையானது இவைகளை ஆவிகள் என்று அழைக்கிறது. ”செவிடும் ஊமையுமான ஆவியானது மனிதனை விட்டு வெளியே போனபோது, அவனால் பேசவும் கேட்கவும் முடிந்ததே.“ அது சரிதானா? அவனுடைய நரம்புகள் அவனுடைய காதுகளுக்குள்ளே மரித்துவிட்டதாக மருத்துவர் கூறுகிறார். நல்லது, அவன் செவிடாக இருக்கிறான். அங்கே மேடையின் மறுபக்கத்தில் இருக்கிற இம்மனிதன் செவிடாக இருக்கிறான். அது என்ன செய்கிறது? ஏன், அவன் மேல் எல்லாவிடங்களிலும் நரம்புகள் ஒருபோதும் மரித்துப்போகாது. ஏன், நரம்புகள் அவனுடைய காதுகளில் மரித்து, அல்லது அவனைச் செவிடாக ஆக்கினது. நல்லது, எது அவ்விதமான செவிட்டுத்தன்மையை உண்டாக்குகிறது? ஏன் அந்த நரம்பு மரித்தது? இப்பொழுது, ஒரு மருத்துவர் தான் காணக்கூடிய அல்லது உணரக்கூடிய எதன்பேரிலும் மாத்திரமே அவரால் வேலை செய்ய முடியும். ஒரு மருத்துவர்... அந்த ஒரே காரியம் மட்டுமே. அவரால் ஒரு கண்ணாடியினுடாக நோக்கிப்பார்த்தோ, அல்லது ஒரு ஃப்ளோரோஸ்கோப் மூலமாக எக்ஸ்-ரே படங்களைப் பார்க்க முடிகிறது, அல்லது அவரால் தம்முடைய கரங்களால் அதை உணர முடிவதன் மூலமாகவோ, ஒரு வளர்ச்சியை தொட்டுணருவதன் மூலமாகவோ, அல்லது அது என்னவாக இருந்தாலும், அதன் மூலமாகவே அவரால் கிரியை செய்ய முடியும். இப்பொழுது, அதன்பேரில் தான் அவர் கிரியை செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் நரம்புகள் என்பதற்கு அது வரும்போது, அல்லது அங்கே ஏதாகிலும்....... அங்கே, அந்த நரம்பானது மரித்துப்போய்விட்டது அவருக்குத் தெரிகிறது. ஆனால் எது அதைக் கொன்றுபோட்டது? அங்கேதான் குழப்பமே இருக்கிறது. பாருங்கள்? 18இப்பொழுது, தேவனுடைய வார்த்தையின் அதிகாரத்தின் பேரில் நான் இதை விவரமாக விளக்கிக் காட்டுகிறேன், அது காண முடியாத ஒரு ஆவியாக இருந்தது. இப்பொழுது, இதோ அது இருக்கிறது. இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். ஜனங்களாகிய நீங்கள், ஒரு இரவோ அல்லது இரண்டு இரவுகளோ, என்னோடு சகித்துக்கொள்வீர்கள், பிறகு மற்ற ஜனங்கள் உள்ளே வருவார்கள், நீங்கள் அவர்களை தைரியப்படுத்தினீர்கள். பாருங்கள்?..?... அந்த தரிசனம். இப்பொழுது, கூர்ந்து கவனம் செலுத்துங்கள். இப்பொழுது, இதோ என்னுடைய கரமானது இருக்கிறது. நான் இதைச் சுற்றிலும் ஒரு தெளிவாகத் தெரிகின்ற பட்டையைக் கட்டப் போகிறேன், அவ்விதமாக நாம் கூறுவோம். ஏன், அப்போது என்னுடைய கரமானது மரிக்கத் தொடங்கியிருக்கும்; இரத்த ஓட்டமானது தடைசெய்யப்பட்டிருக்கிறது. சரி, சற்று கழிந்து என்னால் அந்தக் கரத்தை உபயோகிக்க முடியாது. நான் மருத்துவரிடம் போகிறேன். மருத்துவர் நோக்கிப் பார்த்து, அவர், இப்பொழுது, திரு. பிரன்ஹாம் அவர்களே, எனக்குத் தெரிந்த ஒரே காரியம் உம்முடைய கையிலுள்ள நரம்புகள் மரித்துவிட்டன“ என்று கூறியிருப்பார். நல்லது, அதற்கு நான், டாக்டர், எது அதைக் கொன்றுபோட்டது?“ என்று கேட்டிருப்பேன். நல்லது, அவர், “எந்தக் காரணத்தையும் நான் காணவேயில்லை. ஏன், நான் நோக்கிப் பார்த்துவிட்டேன், அது - அது அவ்வளவு தூரமாக மேலே போகிறது, அது மரித்துவிட்டது. எனக்குத் தெரியவில்லை, ஏதோ அங்கே சம்பவித்து விட்டிருக்கிறது” என்று சொல்லியிருப்பார். நல்லது, அவர் - அவரால் அதைக் காண முடிந்திருந்தாலோ, அல்லது அதை உணர முடிந்திருந்தாலோ, அவர் அங்கே உள்ளே வெட்டிப் பார்த்து, நான் எந்தக் காரணத்தையும் காணவில்லை“ என்று கூறியிருப்பார். 19நல்லது, அந்த நரம்புகள் இந்த கோட்டுக்கும் அப்பால் செயல்படாது; அவைகள் அங்கிருந்தே மரித்துவிட்டன. இப்பொழுது, ஆனால் கையானது மரித்துவிட்டது. இப்பொழுது, என்ன சம்பவித்தது? இப்பொழுது, நான் ஒரு நபருடைய காது, அல்லது கண், அல்லது அது எங்கேயிருந்தாலும், சரீரத்தின் எந்தப் பாகமாக இருந்தாலும், அவ்விதமாக அதை எடுக்கப் போகிறேன். இதைக் குறித்த என்னுடைய சிந்தனையானது, நான் விசுவாசிக்கிறேன், வேதாகம் உபதேசம் என்னவென்றால், சாத்தான் தான் அந்தக் காரியத்தை அங்கே கட்டி வைத்திருக்கிறான். அங்கே அதில் எந்த இரத்த ஓட்டமும் இல்லை. இப்பொழுது, நான் இங்கேயிருக்கும் இந்தக் கட்டை எடுத்து விட்டால், நான் இந்த விரல்களையோ மற்றவைகளையோ துண்டித்து வெட்டி எறிய மாட்டேன். ஆனால் இங்கே தான் பிரதான காரியம் இருக்கிறது. நீங்கள்... உங்களால் சுகத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பாக, நீங்கள் அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. புரிகிறதா? ஆனால் இங்கே அந்தக் காரணம் இருக்கிறது. அப்போது சாத்தான்.... நமக்கு அது தெரியும் - அதை அகற்றுவதற்கு.... இப்பொழுது, அந்தக் கரமானது சரியாக இப்பொழுதே நலமடைந்திருக்காது, ஆனால் அது வித்தியாசமாக இருக்கும். இரத்த ஓட்டமானது இரத்த ஓட்டத்தைத் தொடங்கும். அது வலியாகவும் எரிவதாகவும் இருக்கும், சற்று வித்தியாசமாக உணரும்படி இருக்கும். சற்று கழிந்து, ஒரு சில நாட்கள் கழித்து, கையானது சரியாகிவிடும். நீங்கள் இயற்கைக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால், அது சரியாக செயல்படும். 20இப்பொழுது, வியாதிக்கிருமிகள்.... அது ஒரு நபரைக் கட்டும்போது, அது சாத்தானுடைய வல்லமையாக இருக்கிறது. அந்த ஆவியானது அங்கிருந்து துரத்தப்படும் போது, இயற்கையானது தானாகவே அதைப் பொறுப்பெடுத்துக்கொள்ளும் அந்த நபருக்கு செவிகேட்கத்தான் போகிறது. அவர்கள்.... போவார்கள். அல்லது அவர்களோடு என்ன தவறு இருந்தாலும், அவர்கள் சுகத்தைப் பெற்றுக்கொள்வார்கள். இப்பொழுது, என்னுடைய எஜமானருக்கான என்னுடைய வேலையில், நான் ஒட்டுமொத்தமாகவே ஆவிகளோடு இடைபடுகிறேன். அன்பு நண்பர்களே, நான் இதை தேவனுடைய நியாயத்தீர்ப்பின் வழக்குரைஞர் குழாமில் முகமுகமாய் சந்திக்க வேண்டியிருக்கும். நான் பரலோகத்திற்குப் போக விரும்புகிறேன். எனக்கு பரலோகத்தில் ஒரு மனைவி இருக்கிறாள்; பரலோகத்தில் எனக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. அங்கே அன்பார்ந்தவர்களும் எனக்குண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக, எனக்காக மரித்த ஒருவர் எனக்கு இருக்கிறார். அவர்தான் இயேசு. அங்கே வெளியிலுள்ள உங்களில் எவருக்கும் அவர் இருக்கிறவிதமாகவே அவர் எனக்கும் அவ்வளவு அதிக அர்த்தமுள்ளவராகவே இருக்கிறார். குற்றம்கண்டுபிடிப்பவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை என்னால் எடுத்துக்கொள்ள முடியாது. சத்தியம் என்று நான் அறிந்ததை மாத்திரமே என்னால் கூற முடியும். நீங்கள் உண்மையும் உத்தமமுள்ளவர்களாக இருப்பீர்களானால், தேவன் அதை ஆசீர்வதிப்பார். நீங்கள் உண்மையும் உத்தமமும் உள்ளவர்களாக இருக்க வேண்டுமென்றே தேவன் விரும்புகிறார். 21இப்பொழுது, வியாதிகள் என்றால் என்னவென்று நாம் கண்டுபிடிப்போம். இன்றைக்கு முதலிடத்திலிருக்கிற சத்துரு நிச்சயமாகவே இருதயக்கோளாறாகத் தான் இருக்கிறது. ஆனால் அது ஒட்டுமொத்தமாக கிருமியினால் உண்டாகும் வியாதி அல்ல. ஆனால் கிருமிகளினால் உண்டாகும் வியாதிகளில் முதலிடத்தில் இருப்பது புற்றுநோய்கள் தான், இரண்டாவது இடத்தில் இருப்பது காசநோயாகும். புற்றுநோய் என்பது முக்கிய காரியங்களில் ஒன்றாகும். நாம் சற்றுநேரம் அதைக் குறித்துப் பேசுவோம். ஆனால் இங்கே இந்தவழியில், நான் திரும்பிப்பார்க்கும்படியான வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. நான் உங்களை நோக்கி என்னுடைய முதுகைத் திருப்பிக் கொண்டிருக்கவில்லை, ஆனால் நான் -நான்..... இந்த மின்சார ஒலிப்பெருக்கியை நோக்கியே பேசுவது என்பது இயற்கையானது தான். 22ஆனால் கவனியுங்கள். ஒரு கிருமியானது.... ஒரு கிருமி என்பது என்ன? இப்பொழுது, நாம் ஒரு புற்றுநோயை எடுத்துக்கொள்வோம், முதலாவது அது என்னவாக இருக்கிறது, ஏன், அது ஒரு வளர்ச்சியாகவும், கட்டியாகவும், கண்புரையாகவும், முன்கழுத்து கழலை நோயாகவும் இருக்கிறது? அவைகள் வளர்ச்சிகள் ஆகும். அது சரிதானா? அவைகள் வேகமாகத் தொற்றிப்பரவுகிறதாகவும் புற்றுநோயாகவும் ஆகிவிடுகின்றன. நல்லது, ஒரு வளர்ச்சி என்பது செல்களின் பெருக்கமாக இருக்கிறது. நாம் இப்பொழுது அதன் கீழாக தோண்டிப்பார்ப்போம். அந்த வளர்ச்சியின் கீழாக, ஒரு - ஒரு வளர்ச்சியிருக்கிறது, அது ஒருகூட்டம் செல்களாக இருக்கின்றன. பிறகு அது கீழாக அந்தக் கிருமிக்குப் போகிறது. நல்லது, ஒரு கிருமி என்பது என்ன? ஒரு கிருமி என்பது ஒரு சின்னஞ்சிறிய செல்லாக இருக்கிறது, காணக்கூடிய விதத்தில் மாத்திரமே உள்ள சின்னஞ்சிறு காரியமாக அது இருக்கிறது, இயற்கையான கண்களைக் கொண்டு அல்ல, ஆனால் மைக்ரோஸ்கோப்பின் மூலமாகவோ, கண்ணாடிகளின் மூலமாகவோ. ஆனால் பிறகு அதற்கும் கீழாக; அதில் ஜீவன் இருக்கிறது. அது அசைகிறது. அது தனக்குள் ஜீவனைப் பெற்றிருக்கிறது. அந்தக் கிருமிக்குள் அதற்கும் கீழாக இருப்பது என்ன? அது ஆவியாக ஆகிறது. அந்த ஆவிகள் வரக்கூடியதாக உள்ள இரண்டு ஆதாரங்கள் மாத்திரமே உண்டு: அது ஒன்றில் தேவனிடமிருந்து வர வேண்டும், அல்லது பிசாசிடமிருந்து வர வேண்டும். அவைகளுக்கு இடையில் நடுநிலையான காரியம் கிடையாது. அங்கே எந்த அரைகுறை கிறிஸ்தவனும் இல்லை. குடித்து வெறித்துவிட்டும், குடிமயக்கமில்லாமல் இருக்கும் ஒரு மனிதனை நீங்கள் எப்பொழுதாவது கண்டிருக்கிறீர்களா? கறுப்பாகவும் வெள்ளையாகவும் இருக்கிற பறவையை நீங்கள் எப்பொழுதாகிலும் கண்டிருக்கிறீர்களா? ஒரு பாவியாகவும் பரிசுத்தவானாகவும் இருக்கிற ஒருவனை நீங்கள் ஒருபோதும் கண்டிருக்க மாட்டீர்கள். நீங்கள் ஒன்றில் கிறிஸ்தவனாகவோ அல்லது ஒரு பாவியாகவே இருக்கிறீர்கள். முழு சுவிசேஷ ஜனங்களாகிய உங்களைக் குறித்து நான் அதைத்தான் விரும்புகிறேன்: நீங்கள் அந்தக் கோட்டை வரைந்திருக்கிறீர்கள், நீங்கள் - நீங்கள் ஒரு பக்கமோ அல்லது மற்ற பக்கமோ தான் இருக்கிறீர்கள். நீங்கள் மறுபடியும் பிறந்தவர்களாக இருந்தால்.... நான் ஒரு மனிதனாகப் பிறந்திருந்தால், நான் ஒரு மனிதனாகத்தான் இருக்கிறேன். நீங்கள் ஒரு கிறிஸ்தவனாகப் பிறந்திருந்தால், நீங்கள் ஒரு கிறிஸ்தவனாகவே இருக்கிறீர்கள். 23இப்பொழுது, அந்தக் கிருமியானது, நான் இதைச் சற்று தூரமாக எடுத்துக்கொள்ளட்டும். நீங்கள் ஒரு சிறு கிருமியிலிருந்து தான் வந்திருக்கிறீர்கள் என்று உணர்ந்திருக்கிறீர்களா? அது சரிதானா? இப்பொழுது, அது...?... நீங்கள் ஒரு ஜீவ அணுவிலிருந்தே வந்திருக்கிறீர்கள். நீங்கள் ஒன்றுமே இல்லாமல் இருந்த ஒரு நேரம் அங்கேயிருந்தது. ஐயா, இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் நீரும், அங்கேயிருக்கும் நீரும், உங்களில் எவரும், நானே, ஒரு சிறு ஜீவ அணுவாகவே இருக்கிறேன். நல்லது, அந்த ஜீவ அணுவானது ஆணிடமிருந்தே வருகின்றது. நமக்கு அது தெரியும். இதோ, உதாரணமாக, நாம் ஒரு... கொண்டிருக்கலாம். நல்லது, காட்டு வாத்து வகையைப் (spring) போன்று. பறவைகள் தங்கள் கூடுகளை உண்டாக்கி, அவைகள் தங்கள் முட்டைகளை இடுகின்றன. தாய்ப்பறவையால் தன்னுடைய கூட்டைக் கட்டி, அது முழுவதும் முட்டைகளை இட முடிந்திருக்கலாம். ஆண் பறவை இல்லாமல் கூடு நிறைய முட்டைகளை அதனால் இட முடிந்திருக்கலாம். அது அவைகளின் மேல் இருந்து, அந்த முட்டைகளுக்கு வெதுவெதுப்பாக்கி, அவைகளை அடைகாத்து (hover), அது மிகவும் பரிதாபகரமான நிலையை அடைந்து, அதனால் அந்தக் கூட்டை விட்டு வெளியே போக முடியாத அளவுக்கு, அங்கேயே தங்கியிருக்கலாம். அப்போதும் அந்த முட்டைகளில் ஒன்றும் குஞ்சு பொறிக்காது. அவைகள் சரியாக அங்கேயே கிடந்து, அந்தக் கூட்டிலேயே கெட்டுப்போகும் (அது சரிதானா?), ஏனென்றால் அவைகள் துணையோடு இருந்திருக்கவில்லை. அது ஆண் பறவையோடு இருந்திருக்கவில்லை; ஆகையால் அவைகள் வளமானதாக இல்லை . அது இந்தப் பழைய குளிர்ந்து போன சடங்காசாரமாக இருக்கும் ஏராளமான சபைகளை எனக்கு நினைவூட்டுகிறது. நீங்கள் அவர்களை சுற்றிலும் சூழ தழுவிக்கொண்டாலும், அவர்களை திருப்பிப் புரட்டிப்போட்டாலும், அவர்களை சபைக்குள்ளாக அன்போடு தட்டிக்கொடுத்தாலும், அது கூடு முழுவதும் உள்ள அழுகிப்போன முட்டைகளாகத்தான் இருக்கின்றன, ஏனென்றால் அவர்கள் ஆணாகிய கிறிஸ்து இயேசுவோடு இருந்திருக்கவில்லை. முதற்கண் அவர்கள் விசுவாசிகளே கிடையாது. அது சரியே. 24நமக்கு இன்று என்ன அவசியமாயிருக்கிறது என்றால், ஒரு நல்ல பழமை நாகரீகமான துடைத்து துப்புரவாக்கப்படுதலும், தேவனோடு சரிப்படுத்திக்கொள்வதும் தான். அது முற்றிலும் சரியே. அது சரியா அல்லது தவறா என்று கூறும்படி, அதைக் கொண்டு வர - அதை மறுபடியும் கொண்டு வருவதற்கு - தேவனிடத்திலுள்ள ஜீவனுள்ள விசுவாசத்திற்கு ஜனங்களைத் திருப்பிக் கொண்டுவருவது தான் நமக்குத் தேவையாக இருக்கிறது. மனிதர்களும் ஸ்திரீகளும், தாங்கள் எவ்வாறு இருக்க வேண்டுமென்று உரிமை கோருகிறார்களோ, அவ்வாறு இருக்கும் அந்த நாளை தேவன் தந்தருளுவாராக. அது சரியே. அது.... இப்பொழுது, கவனியுங்கள். ஆனால் ஆண்... பாருங்கள், தேவன் அதை முன்நியமித்து விட்டார். அந்தவிதமாகத்தான்.... இயேசு ஒரு கன்னிப்பிறப்பை உடையவராக இருந்தார் என்று நாம் விசுவாசிப்பதாக நாம் காரணம் கூறுகிறோம். அதைக் குறித்து முழு சுவிசேஷ சபைகளில் நிறைய விவாதம் நடப்பதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். பாருங்கள், மரியாள் ஒரு கன்னிகையாக இருந்தாள் என்று நான் விசுவாசிக்கிறேன். அவள் எந்த மனிதனைக் குறித்தும் எதையும் அறிந்திருக்கவில்லை. ஆனால் யேகோவா தேவன் அவளை நிழலிட்டு, அவளுடைய கர்ப்பத்தில் ஒரு இரத்த உயிரணுவை சிருஷ்டித்தார், அவர்தாமே ஒரு சிருஷ்டிக்கும் வல்லமையாக இருந்தார். அந்த இரத்த உயிரணுவிலிருந்து தான் கிறிஸ்து இயேசுவாகிய மனிதர் வந்தார். அவர் ஒரு கன்னிப்பிறப்பின் மூலமாக, தமது பிதாவின் இரத்தமாக இருந்தார். அது.... அந்த இரத்தத்தைக் குறித்து தான் நான் இன்றிரவில் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறேன், அது இரட்சிக்கவும் சுகமாக்கவும் செய்கிறது, அது தேவ குமாரனுடைய கலப்படமற்ற இரத்தமாக இருக்கிறது. நண்பர்களே, நீங்கள் அதை விசுவாசிக்காவிட்டால், உங்களால் இரட்சிக்கப்பட முடியாது. வேறு எந்த வழியும் கிடையாது, ஆனால் தமது பிதாவாகிய தேவனுடைய இரத்தமாக இருக்கும் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாகத்தான் நீங்கள் இரட்சிக்கப்பட முடியும், அது கலப்படமற்றது, எந்த இனச்சேர்க்கையும் அதற்குள் கலந்துவிடவேயில்லை - இல்லை. அது சிருஷ்டிக்கப்பட்ட பிறப்பாக இருக்கிறது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அதுதான் உண்மையான சுவிசேஷம், நண்பர்களே. இப்பொழுது, நாம்...